"துப்பாக்கி" படம் பார்த்தபின் தங்கிய சில நினைவுகள்:
வித்தியாசமான விஜை- கொஞ்சம் அதிக குறும்பு, கூடிய இளமை, ஒரு சோம்பேரித்தனமான
ஆனால் எதிரிகளைத் தகர்க்கும் அதிரடி, அசரவைக்கும் நடனம். முதல்வன் அர்ஜுனையும்,
அயன் சூரியாவையும் அடிக்கடி நினைவுப் படுத்துகிறார் - ஆனால் மாறுபட்டு
நிற்க்கிறார்
கண்களை உறுத்தாத வண்ணங்கள்- சில இடங்களில் கேமராவின் அபார ஓட்டத்துடன்
ஈடு கொடுக்க வேண்டி இருக்கிறது
இயக்குனர் முருகதாஸ்- தன் வித்தியாசமான கதையின் மேல் அபார நம்பிக்கை.
நிறைய சிந்தித்திருக்கிறார்- நிறைய பேருடன் விவாத்தித்திருக்கிறார்- உழைப்பு
தெரிகிறது. இவரின் புத்திசாலித்தனம் ஹீரோயினை அளவோடு உபயோகித்திருப்பதில், விஜையை
தேர்ந்தெடுப்பதில் தெரிகிறது. காவல்துறைக்கும் ராணுவத்துக்கும் உள்ள வேறுபாட்டை மிக மெலிதாக உணர்த்த முற்ப்பட்டிருப்பது ஒரு நல்ல முயற்ச்சி
ஹாரிஸ் ஜெயராஜ் - ஏமாற்றி இருக்கிரார். பாட்டுக்கள் நினைவில்
நிற்க்கவில்லை- முணுமுணுக்க வைக்கவில்லை. கூகுள் கூகுள் திணிக்கப் பட்டு
ப்ரபலமாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.
பாடல்கள் இல்லாமல் இந்தப் படம் ஒரு ஆர்னால்டின் படம் போல் இருந்திருக்கும்.
ஆனால் கல்லா கட்டாது. ரசிகர்களுக்கும், தமிழ்ப் பட உலகுக்கும், முக்கியமாக
முருகதாஸ் அடுத்த படம் எடுப்பதற்க்கும், இவை தேவைப்படுகிறது. பரவாயில்லை - இந்த
உலக நன்மைக்காக இந்தச் செல்ல இம்சைகளை சகித்துக் கொள்ளலாம்.
சத்யன்- சிந்திக்க வைக்கிறார். தன் கதாபாத்திரம் மூலம் ஒரு இயற்க்கையான,
ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பால் கவர்கிறார். ஒரு நடிகனாக இவர் கடந்து வந்த பாதையால்
வியக்க வைக்கிறார். சின்ன சின்ன வாய்ப்புகளை எப்படி உபயோகப் படுத்திக் கொண்டு தன்
இடத்தை நிலைப் படுத்திக் கொண்டிருக்கிறார்! கொஞ்ச உதவியும், நிறைய உழைப்புடனும் ஒருவர்
எப்படி முன்னேரலாம் என்பதற்க்கு ஒரு நல்ல உதாரணம்
டைட்டிலில் இருக்கும் முன்னாள் குற்றவியல் தலைவர் கார்த்திகேயனுக்கு நன்றி எதற்க்கு என்பதற்க்கு கதையில் விடை கிடைக்கிறது. சுஜாதாவிர்க்கு ஒரு நல்ல மாற்று
நபரை கண்டுபிடித்த முருகதாசின் சிந்தனைக்கு ஒரு ஓ போடலாம். இக்காலக்
கதாசிரியர்களின் புத்திசாலித்தனத்துக்கு, "sleeper cell" என்னும் புதிய சிந்தனை ஒரு உதாரணம்.
பிடித்தது: பத்து ரீலிலும் எதையோ எதிர்பார்த்து உட்கார வைத்தது, விஜயின் இளமை,
குறும்பு, சத்யன் வழியாக ரசிகர்களுடன் பேசும் முருகதாசின் புத்திசாலித்தனம்,
கதையில் உள்ள சில புதிய நுணுக்கங்கள்/உத்திகள்.
பிடிக்காதது: இவ்வளவு பிடித்தபோது, இது எதற்க்கு- விட்டுத் தள்ளுவோம். இல்லாததைத்
தேடுவதை விட இருப்பதை ரசிப்போம்.
ஏமாற்றுவதர்க்கு மன்னிக்கவும். பேனாவை எடுத்து என் எண்ணங்களை கிழிக்க
தயாராக வேண்டாம். இது துப்பாக்கி பட விமரிசனம் அல்ல-விமரிசனம் எழுதுவது என் நோக்கமுமல்ல. இந்தப் படத்தை 120 ரூபாய் டிக்கட்டுக்குக்
கொடுத்து, மேலும் 500 ரூபாய் செலவழித்து பாப் கார்ன் கொரித்துக் கொண்டே 3 மணி
நேரம் தியேட்டரில் செலவழித்தற்க்கு, எனக்கு இதை வெளிப் படுத்துவதற்க்கான உரிமை
இருக்கிறது என்றே நினைக்கிறேன்.
கில்லிக்குப் பின் நிறையப் பேசப்படும் என்று தோன்றுகிறது. விஜய் இப்படிக்
கவனமாகத் தேர்ந்தெடுத்தால், இன்னும் நிறைய நாட்கள் அவரின் பல நல்ல படங்களை
எதிர்பார்க்கலாம்.
Wonderful review. Thanks for making me "see" the movie
ReplyDeleteV Rajendran