நினைத்த உடனே காலில் செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பி ஷூவும் , குளிர் கோட்டும் போடாது சிறிது தொலைவு போனபின் -
எல்லா திசையிலிருந்தும் வரும் வாகனங்களையும் சமாளித்து லாவகமாக ஒதுங்கி ரோட்டிலேயே நடக்கும் பொழுது -
நடை பாதையில் நடக்காமல் அது தேடியும் கிடைக்காத பொழுது -
முன் போகும் வாகனத்திலிருந்து வரும் புகை நாசியைத் தாக்கி தானாக கைக்குட்டையை எடுக்கும் போது -
ஒரு கை தேர்ந்த வித்தைக் காரனாக, சிக்னல் இல்லாத தெருவை வாகனங்கள் வராத நேரத்தில் விருட்டென்று கடந்த போது -
தெருவில் சொல்ப வாகனங்களே போனாலும் பெருத்த ஹார்ன் சப்தம் கேட்ட போது-
சந்தையில் 'காலி.... பிளவர் பத்தே ரூபா' என்ற சத்தம் செவிப்பறையை தாக்கிய பொழுது -
நடக்கும் பொழுது காசே கொடுக்காமல் பட்சணக் கடையிலிருந்து வரும் வெங்காய பக்கோடாவின் கம கம வாசனையை அனுபவித்த போது -
பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றாமல் முழங்களாகக் காத்திருக்கும் ரோஜாவையும் , மல்லீப்பூக்களையும் பார்த்த பொழுது -
பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றாமல் முழங்களாகக் காத்திருக்கும் ரோஜாவையும் , மல்லீப்பூக்களையும் பார்த்த பொழுது -
வைகறையில் மாட வீதிகளில் பாண்டு ரங்கனை கூவி அழைத்த பஜனை கோஷ்டியைக் கண்ட பொழுது -
கொசு வலையைத் தேடும் போழுது -
மின்சாரம் போய் போய் வந்த பொழுது -
வங்கியில் பணமெடுக்கப் போனால் வாசலிலேயே ஒரு கும்பல் உதட்டைப் பிதுக்கிய பொழுது -
மடியில் கனமே இல்லாத ஏடீஎம் குஷியாய் குளு குளு அறையில் யாருக்கும் உதவாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்த பொழுது -
மடியில் கனமே இல்லாத ஏடீஎம் குஷியாய் குளு குளு அறையில் யாருக்கும் உதவாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்த பொழுது -
.. . . . . . . . உறைத்தது , நான் என் ஊருக்குத் திரும்பி விட்டேன் என்று !
Very nice - Rajendran Rangarajan
ReplyDelete"அஹோபில யாத்திரையைப் பற்றிய கட்டுரையைப் படித்தேன்.இல்லை இல்லை என் இதயத்தினுள் புகுத்தினேன். அவ்வளவு அருமையாக விவரிக்கப்பட்டிருந்தது. நானும் பயணப்பட வேண்டும் எனும் வேட்கையை உண்டாக்கிவிட்டது.என்னால் அடக்க முடியாத உணர்வாக மாறிவிட்டது. அடுத்த பயணம் எப்போது? பஹவத் கிருபை இருந்தால் நானும் பயணம் வர விழைகிறேன். போட்டோக்களும் மிக அருமையாக தத்ரூபமாக உள்ளது. நன்றி வாழ்த்துக்கள் " - Narayanan Mohan
ReplyDelete