ரொம்ப நாளாகவே மற்ற ஆபிஸுகளில் உள்ளவர்களுக்கு ஐ டி ஆசாமிகள் மேல் ஒரு காண்டு- எவ்வளவு டீக்காக ட்ரஸ் பண்ணிண்டு போறா, கழுத்தில் தொங்கும் பட்டய வேணும்னே நம்ம க்ராஸ் பண்ணும்போது அட்ஜஸ்ட் பண்ணிக்கறா, லேட்டானாலும் வீட்டு வாசல்ல கார்ல வந்து டம்பமா இறங்கறா, ஏகப்பட்ட சம்பளம், எப்ப வேணும்னாலும் உள்ளேயே கிடைக்கும் காபி, டீ வகையறா. ஹும்ம்ம்....
ஐ டி ஆசாமிக்கு மத்தவங்களப் பாத்து பெருமூச்சு - அஞ்சு மணிக்கு கைய உதறிண்டு போயிடறா, வேல முடிஞ்சுதா இல்லையாங்கறதப் பத்தி எல்லாம் கவலை கிடையாது, கம்ப்யூட்டர் வேல செய்யலேன்னா கவல இல்லை, அப்படியே வெச்சுட்டு போயிடலாம், வேலை நேரத்துக்குள்ள மட்டும் தான் அதிகாரம் பண்ண முடியும், ஆபிசை விட்டு படி இறங்கினா கூப்பிட முடியாது, சனி, ஞாயிறெல்லாம் தொந்தரவு கிடையாது. ஹும்ம்ம்ம்ம்....
இப்படி ஒருத்தருக்கொருத்தர் அக்கரைப் பச்சைகளைப் பார்த்து பெருமூச்சு விட்டே ஒரு மானியமில்லா சிலிண்டரை ரொப்பிண்டிருக்காங்க . இன்னிலையில் இவ்விருவர்களுக்குமிடையே ஆபீஸ் நடைமுறைகள் கொஞ்சம் மாறினா எப்படி இருக்கும்னு ஒரு (விபரீத?) கற்பனை:
யூனியன் உள்ள ஐ டீ கம்பெனி:
1. "சார் மணி ஆறாயிடுச்சி, இனிமே நம்மாளுங்க உக்காரணும்னா வாங்க ஓ டீ ஹவர்ஸ் பேசலாம்"
2. "புது டிஃபெக்டெல்லாம் கூடுதல் வேல சார், அதுக்கு தனி ஆள் போடுங்க. நம்ம டீமூ பழைய டிஃபெக்ட்டுங்கள மட்டும் தான் கண்டு பிடிப்பாங்க"
3. தோழர்களே, இன்னேலேர்ந்து நாம் work to Rule பண்ணப் போரோம். ஏதாவது பிரச்சனைன்னா லீடருக்கு மெயில் அனுப்பிச்சுட்டு வீட்டுக் கிளம்பிடுங்க.
4. மானேஜர் கூப்பிட்டு ஏதாவது வேலை குடுத்தா, நீங்க எதுவும் பேசத் தேவ இல்ல. லீடர் வழியா பேச சொல்லுங்க
5. ஆறு மணிக்கு மேல ப்ரொஜக்ட் டைரக்டரே கூப்டா கூட போன எடுக்காதேங்கப்பா.
6. சார் வேணும்னே எங்காளுங்க டிஃபெக்டை கண்டு பிடிக்கலன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்
7. ஸ்பெக்குல ஏதானும் புரியல்லேன்னா, நீங்க ஒண்ணும் க்ளையண்ட் கிட்ட டைரக்டா பேசத் தேவை இல்ல. லீடப் பேசிப் புரிஞ்சுண்டு உங்களுக்கு விளக்கச் சொல்லுங்க.
8. எதுக்கு சார் எங்காளுங்களை கான் காலுக்கு அனாவசியமா இழுக்குறிங்க- அதெல்லாம் உங்க வேலை!
9. நாளைக்குள்ள கிளையண்டுக்கு அனுப்பணும்னு இப்ப சொன்னா வேலக்கு ஆகாது சார்
10. அந்த லீடு வேணும்னே எங்காளுங்களை பொங்கல், தீபாவளின்னு லீவு நாளா பாத்து ஆபீசுக்கு வரச் சொல்றதாக பசங்க சொல்றங்க
ஐ டி வழியை தத்தெடுத்த ஒரு ஆபிஸ்:
1. என்னா சார், அநியாயமா இருக்கு. டெஸ்பாச்சுல ஒண்ணுமே வேலை செய்யாத அந்த பொண்ணுக்கு அப்ரைசல்ல பி கொடுத்துட்டு , கவுண்டர்ல லோல் பட்ட எனக்கு சி கொடுத்திருக்கீங்க.
2. ஒங்களுக்கே நியாயமா இருக்கா. பத்து வருஷமாச்சு காலேஜு முடிச்சு. இங்க்ரிமெண்ட் கேட்டா இப்பப் போய் இந்த வருஷம் என்ன புதுசா படிச்சேன்னு கேக்கறிங்க
3. சார் இப்பவே மணி ஏழாச்சு இன்னும் இதை முடிச்சுட்டுதான் போகணுங்கரீங்க
4. நேத்து நைட்டு ஒம்பது மணிக்கு லீட் பண்ணின ஃபோனை எடுக்கலயாம். அதுக்காக மெமோ கொடுக்கறதெல்லாம் ரொம்ப ஓவர் சார்.
5. இன்னா சார் ப்ரிண்டர்ல மாட்டிகின பேப்பர்லாம் நாங்களே தான் எடுக்கணுமா?
6. என்ன கொடுமை ஸார், மானேஜர் மட்டும் அஞ்சு மணிக்கே போயிடறாரு, நாங்க மட்டும் மாங்கு மாங்குன்னு வேல செய்யணுமா?
7. எதுக்கு சார் கஸ்டமர் என்ன திட்டினாலும் சிரிச்சுண்டே இருக்கச் சொல்ரீங்க- ஒண்ணுமே புரியலயே ஸார் !!
8. போங்க ஸார். ஐ. டீ ஆபிஸ் போலன்னு சொல்லிட்டு இப்ப என்னடான்னா லேட்டாச்சு, வேன் வரலன்னு அக்கௌண்டண்ட் ஸ்கூட்டில பின்னாடி உக்காந்துண்டு போகச் சொல்ரீங்க
9. ஐ டீ மாதிரி ஜோரா இருக்கலாம்னு நினைச்சா , எல்லா வேலயும் நம்மளயே பண்ணச் சொல்ராங்களே
10. ஐ டீ கம்பெனி மாதிரின்னு சொன்னீங்க. ஆன்சைட்டு பிராஞ்சுக்கே அனுப்ப மாட்டேங்கறீங்க?

No comments:
Post a Comment