சில விஷயங்கள் நடக்கும் போது நமக்கே ஆச்சர்யமாக இருக்கும்-
இது எப்படி எனக்கு மட்டும் ஏறுக்கு மாறாகவே நடக்கிறதுன்னு. கொஞ்சம் கவனிங்க:
ஹிந்து பேப்பர் சரியில்லேன்னு வேற பேப்பருக்கு மாறினா,
இப்பத்தான் ஹிந்தூல, நல்ல நல்ல ஆர்ட்டிகிளா வருது.
நான் ஆபீசுக்குப் போரதுக்கு முன்னாடி லேப்டாப்பை
மூடினப்புறம்தான், டிங், டிங்குன்னு மெயிலா வருது
நான் கீஸர் போட்றப்பத்தான் கரண்ட் போகுது.
நான் வாசக் கதவைப் பூட்டும் போது தான், வீட்டுகுள்ளே ஃபோன்
அடிக்குது
நாம வெளியே போயிட்டு வந்தப்புறம்தான் கேஸோ, குரியரோ
"இப்பத்தான் "வந்துட்டுப் போறாங்க"
நாம சிக்னல் கிட்ட வரும்போது தான், பச்சையிலிருந்து ஆரஞ்ச்
வருது.
நம் வண்டி கோவிலைக் கடக்கும்போதுதான், ரோடோர ஆஞ்சனேயர்
கோவிலில் திரை போடுகிறார்கள்
நான் பில் போடப்போகும் போது தான், பேப்பர் ரோல் தீர்ந்து
போறது
ரொம்ப நேரம் காத்திருந்து, என் டர்ன் வர போது தான் டாக்டர்
பத்து நிமிஷம் கமர்ஷியலுக்கு ப்ரேக் விட்றார்
மார்கழி மாசம் கோவில் ப்ரசாதம் வாங்கும் போது நான் கிட்ட வரப்ப
தான் குருக்கள் குணா படத்தில வர மாதிரி காத்திருக்கச் சொல்ரார்.
தினமும் கரெக்ட்டா வர கார் ட்ரைவர், அவசர மீட்டிங்
இருக்கறப்போதான் லேட்டா வரார்.
பாங்குல என் டோக்கன் நம்பர கூப்பிட்டு , உட்காரச்
சொல்லிட்டுத்தான் கேஷியர் உள்ளே போய் பணம் எடுக்கப் போறார். திரும்பி வரும் போது
தான் அவருக்கு தன் மச்சினி கல்யாணம் நிச்சயமான போன் வருது- சிரித்து சிரித்து பேசுகிறார்
என் நகங்கள் காணாமல் போறது பற்றி கவலைப்படாமல்.
செக்குல டேட் போடும்போதுதான் பேனா மக்கர் பண்ணுது
மனைவி வெளியே போயிருக்கும் போது ஒரு ரகசிய காப்பியை லபக்கலாங்ர போதுதான் கேஸ் தீந்து போய் அது யார் பக்கம்னு காட்றது
இன்னும் எத்தனை எத்தனையோ. இதெத்தான் உப்பு விக்கப் போனா மழை
வருது, மாவு விக்கப் போனா காத்தடிங்குதுங்குராரோ கமல் 'அபூர்வ சகோதரர்களில்' !!
இதச் சமாளிக்க ஆங்கிலத்தை துணைக்குக் கூப்பிட வேண்டியதுதான்
- "You are not matured until you expect the
unexpected"