Saturday, June 23, 2012

காலை நேரப் பூங்குயில்

விடியற்காலை எப்பொழுதுமே எனக்கு ஒரு தனி சந்தோஷத்தைக் கொடுக்கிறது. இன்னும் யாருமே எழுந்திருக்காத காலை இன்னும் சுகம். நல்ல தூக்கத்திற்க்கு பின், ஒரு தெளிந்த மனத்துடன், நேற்றைய வடுக்களை அங்கேயே விட்டு விட்டு அல்லது மறந்து போய், யோசிக்கும்போது , மனம்தான் எவ்வளவு தெளிவாய் இருக்கு !

சென்னை மாநகரத்தில் யாருக்கும் கிடைக்காத ஒரு தனி சுகம் எனக்கு உண்டு. இருப்பது ஒரு அடர்ந்த பகுதியான மந்தவெளியாக இருந்தாலும், இன்னும் விட்டு வைத்திருக்கும் சில மரங்கள் ஒரு வரப்ரசாதம். அதிலிருந்து, தினமும் அலாரம் அடித்தால் போல் காலையில் ஒரு குயில் கூவுவது, சென்னைவாசிகள் கற்பனயில்தான் காணமுடியும். எனக்குக் கிட்டியுள்ளது.


எழுந்தவுடன் நல்ல சந்தோஷ எண்ணங்கள், நல்லதே நடக்கும் என்ற சிந்தனைகள், ஒரு நாளை நல்ல விதத்தில் ஆரம்பிக்கும் யுக்திகள்.  


ஒரு இனிய காலைப்பொழுதில் - 24 ஜுன்-2012



No comments:

Post a Comment